இனி யாருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்!- மின்சார வாரியம் விளக்கம்!! TNEB 100 Unit Free Electricity Who Else Explanation

இனி யாருக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும்!- மின்சார வாரியம் விளக்கம்!!

TNEB 100 Unit Free Electricity Who Else Explanation

TNEB 100 Unit Free Electricity Who Else Explanation 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படுவதாக வெளியான செய்தி வதந்தி எனக் கூறியுள்ள தமிழக மின்வாரியம், இது தொடர்பான விளக்கத்தையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 3 கோடி மின் இணைப்புகள் உள்ளன. அதில், வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கு முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. கடந்த 2022ம் ஆண்டு இறுதியில், மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் உத்தரவிட்டது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNEB 100 Unit Free Electricity Who Else Explanation
TNEB 100 Unit Free Electricity Who Else Explanation

ஒன்றிற்கு மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்பவர்களும்கூட, அனைத்து இணைப்புக்கும் ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்யலாம், அல்லது வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களின் ஆதார் எண்ணைக்கொண்டு வாடகைக்கு விட்டுள்ளதாக குறிப்பிட்டு பதிவு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.

இதனால் 100 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் ரத்து செய்யப்படுமோ என அப்போதே மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது. ஆனால், அப்போதைய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது என உறுதியளித்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் எடுக்கப்பட்ட மின் கணக்கீட்டில் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு எப்போதும் செலுத்தும் தொகையை விட கூடுதலாக மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, முழு யூனிட்டுக்கும் கட்டணம் வசூலித்திருப்பதாக தகவல் வெளியானது. இதனை தமிழக மின் வாரியம் மறுத்துள்ளது.

விளக்கம்

இது தொடர்பாக மின்வாரியம் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம்:

ஒரு வீட்டின் உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வைத்திருந்தால், அவருக்கு 100 யூனிட் மின்சாரம் மட்டுமே மானியமாக வழங்கப்படும். அதுவே வீட்டின் உரிமையாளர், அவரது வீட்டை வாடகைக்கு விட்டிருந்தால், அவர்களுக்கும் 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும்.

அனைத்து வீடுகளுக்குமான 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்திதான். இவ்வாறு அதில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்மூலம் வாடகைக்கு இருப்பவர்களுக்கு மானியம் ரத்து ஆகாது என உறுதியாகியுள்ளது.

TNEB 100 Unit Free Electricity Who Else Explanation

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என சமூக வலைதளங்களில் வெளியான செய்தி வதந்தி என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியானது உண்மை நிலைக்கு மாறானது. தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பிற்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளபடுகிறது.

TNEB 100 Unit Free Electricity Who Else Explanation

இதேபோல், வீட்டு பயன்பாட்டிற்கென மின் இணைப்பு பெற்று அதனை ஆணையத்தின் விதிமுறைகளுக்கு எதிராக பொது பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்திற்கு உட்படுத்தப்படும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புகளினால் மின்வாரியத்திற்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியினால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள்/ வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடைய தேவையில்லை.

வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட்டாது. அது தொடர்ந்து வழங்கப்படும் என்பது இதன் வாயிலாக தெளிவுபடுத்தப்படுகிறது இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

Leave a Comment

error: Content is protected !!