10th,12th, டிகிரி முடித்தவர்களுக்கு ரூ.1000 வரை உதவித்தொகை எப்படி விண்ணப்பிப்பது?- தமிழக அரசு அதிரடி திட்டம்!..
TN Unemployed Allowance scheme
TN Unemployed Allowance scheme: தமிழ்நாடு அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், கல்லூரி படிப்பை முடித்து வேலை தேடும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் “வேலையின்மை உதவித்தொகை” வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

அதாவது, பொதுப்பிரிவினர்களில் 10 வகுப்பு தோல்வி அடைந்தவருக்கு ரூ. 200, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ. 300, 12 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்க்கு ரூ. 400, மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்க்கு ரூ. 600 நிதி உதவி மாதந்தோறும் வழங்கி வருகிறது.
அதேபோல், மாற்றுத்திறனாளிகளில் 10 வகுப்பு முடித்தவர்க்கு ரூ. 600, 12 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ. 750 மற்றும் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கு ரூ. 1,000 நிதி உதவி இத்திட்டத்தின் கீழ் மாதந்தோறும் வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்திற்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, ஆண்டு வருமானம் ரூ. 72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும், இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.