தமிழகத்தில் ஏப்ரல் 22 முதல் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை அறிவிப்பு!! Tamilnadu Private School Free Admission April 22 Start

தமிழகத்தில் ஏப்ரல் 22 முதல் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை அறிவிப்பு!!

Tamilnadu Private School Free Admission April 22 Start

Tamilnadu Private School Free Admission April 22 Start தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இலவச மாணவர் சேர்க்கையானது நடைபெற உள்ளது. அது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Tamilnadu Private School Free Admission April 22 Start
Tamilnadu Private School Free Admission April 22 Start

ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் ஆரம்ப நிலை வகுப்புகளில் 25 சதவீத இடங்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் இலவசமாக மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது.

கல்வியாண்டு 2024 -25 காண மாணவர் சேர்க்கை தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில முதன்மை தொடர்பு அதிகாரி பழனிச்சாமி அவர்கள் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலருக்கு அறிக்கையாக அனுப்பி உள்ளார்.

அவ்வரிக்கையில் வருகின்ற கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பணிகள் ஏப்ரல் 22ஆம் தேதி தொடங்கி மே இருபதாம் தேதி வரை நடைபெற உள்ளது என தெரிவித்துள்ளார். ஏப்ரல் 10ஆம் தேதிக்குள் தனியார் பள்ளிகள் 25 சதவீத இடங்களை கணக்கிட்டு அதன் விவரங்களை எமிஸ் தளத்தில் மற்றும் பள்ளியின் முகப்பு வாயிலில் பலகையாக வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த இட இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும்.

விண்ணப்ப பணிகளை மேற்கொள்வதற்கு எளிதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலர் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் வட்டார கல்வி அலுவலர் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி வட்டார வள மையம் ஆகிய அலுவலகங்களில் பதிவு செய்ய தேவையான ஸ்கேனர் வசதி ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நேரடியாக விண்ணப்பிக்கும் பெற்றோர்களுக்கு பள்ளி ஒப்புகை சீட்டையும் வழங்க வேண்டும் என்று அவர் அறிக்கையில் வெளியிட்டுள்ளார் .

பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு பிறப்புச் சான்றிதழை ஆய்வு செய்து பெற்றோரிடம் வயது குறித்து உறுதிமொழி படிவத்தில் ஏதாவது ஒன்றை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு உத்தரவின்படி 1 ஆகஸ்ட் 2022 முதல் 31 ஜூலை 2021க்குள் பிறந்திருக்கின்ற குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையானது 1 ஆகஸ்ட் 2018 முதல் 31 ஜூலை 2019ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மே 28ஆம் தேதி இந்த சேர்க்கை குளுக்கள் முறையில் பணிகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேர்க்கை க்கு தேர்வானவர்களின் விவரங்கள் காத்திருப்போர் பட்டியல் மே 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள்ளாக பதிவேற்றம் இணையதளத்தில் செய்யப்பட வேண்டும்.

எனவே இவ் இட ஒதுக்கீடு மூலமாக தனியார் பள்ளிகளில் படிக்கும் வாய்ப்பு ஏழை மக்களுக்கும் கிடைக்கும் மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!