12-ம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
Tamil Nadu 12th Result 2024 Mark Sheet Issue Date
Tamil Nadu 12th Result 2024 Mark Sheet Issue Date தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவானது இன்று மே 6ஆம் தேதி வெளியான நிலையில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு எழுதியவர் எண்ணிக்கை
தமிழ்நாடு மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். குறிப்பாக 7,534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80,550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி
பிளஸ் டூ மாணவர்கள் பொதுத்தேர்வு விடைத்தாள்களானது மார்ச் 23ஆம் தேதி முதல்101 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. அங்கே இருந்து திருத்துதல் முகாம்களுக்கு மார்ச் 28ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டன தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணியானது ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கியது.
தொடர்ந்து 13-ஆம் தேதி வரை 86 மையங்களில் திருத்தல் பணியானது நடைபெற்றது. இறுதியாக பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றிடம் பணிகளும் நடைபெற்று முடிந்துள்ளன இதனை தொடர்ந்து பொதுத்தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது.
அன்பில் மகேஷ் அமைச்சர் வாழ்த்து
தேர்வு முடிவுகள் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பிளஸ் 2 பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். மதிப்பெண்கள் குறைவாக பெற்று உடனடித் தேர்வுகள் எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தேர்வுகளை எதிர்கொள்ளவும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வெற்றி பெற்ற மாணவர்கள் என்றில்லாமல் தேர்வு எழுதிய அனைத்து மாணவச் செல்வங்களின் வளமான எதிர்காலத்திற்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு துணை நிற்கும்” என பதிவிட்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளை எங்கு அறியலாம்?
www.dge1.tn.nic.in ,
www.dge2.tn.nic.in ,
www.dge.tn.gov.in ,
www.tnresults.nic.in
ஆகிய இணையதளங்களின் மூலமாகத் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளிகளில் மாணவர்கள் வழங்கிய, தொலைபேசி எண்களுக்கும் தேர்வு முடிவுகளை குறுஞ்செய்திகளாக அனுப்ப பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடுகளை செய்துள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு வெளியானதை தொடர்ந்து வருகின்ற 9ம் தேதி முதல் மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.