ரூ.1000 செலுத்தினால் ரூ.5 லட்சம் மேல் பெரும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முழு விவரங்கள்!! Selva Magal Thittam Full Details In Tamil

ரூ.1000 செலுத்தினால் ரூ.5 லட்சம் மேல் பெரும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முழு விவரங்கள்!!

Selva Magal Thittam Full Details In Tamil

Selva Magal Thittam Full Details In Tamil மத்திய அரசாங்கம் பெண் குழந்தைகளுக்காக பிரத்தியேக சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் பெயர் சுகன்யா சம்விதி யோஜனா திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தை தமிழ்நாட்டில் செல்வ மகள் சேமிப்பு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை அணைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் குறிப்பிட்ட வங்கிகளிலும் இத்திட்டத்தை தொடங்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Selva Magal Thittam Full Details In Tamil
Selva Magal Thittam Full Details In Tamil

செல்வமகள் சேமிப்பு திட்டமானது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் ஜனவரி 22ஆம் தேதி 2015 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இது பெண் குழந்தைகள் மேம்பாட்டுக்கு என ஒரு சிறப்பு திட்டமாக உருவாக்கப்பட்டது.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் தகுதி

இத்திட்டத்தின் பதிவு செய்யும் காலம் முழுவதும் இந்தப் பெண் குழந்தை கண்டிப்பாக இந்திய குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். ஒருவேளை குடியுரிமை மாற்றப்பட்டால் திட்டத்திற்கான வட்டி பெற இயலாது .மற்றும் அத்துடன் கணக்கை உரிய காலத்திற்கு முன்னரே மூடப்படும்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முதலீட்டு முறை

செல்வமகள் சேமிப்பு திட்டம் மூலம் பணம் மற்றும் செக் வாயிலாக பணம் செலுத்தும் முறை மட்டுமல்லாமல் நீங்கள் கணக்கு துவங்கிய வங்கி அல்லது அஞ்சலகங்கத்தில் உள்ள மைய வங்கி இருந்தால் மின்னணு அல்லது இணையம் வாயிலாகவும் சந்தாவை செலுத்தலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் வட்டி எவ்வளவு

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 1000 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை வைப்புத் தொகையாக செலுத்தலாம். ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த கணக்குகளை துவங்குபவர்கள் எல்லா மாதமும் பத்தாம் தேதிக்குள் தவணையை கணக்கில் முதலீடு செய்ய வேண்டும் ஒருவேளை தவறினால் வட்டி குறைந்துவிடும்.

செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் வருமான வரி விலக்கு உண்டா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் உங்கள் குழந்தைகள் பேரில் செய்யும் தொகைக்கு பிரிவு 80 சி யின் கீழ் வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

இடைநிறுத்தம் செய்யப்பட்ட கணக்கை மீண்டும் துவங்குதல்

ஒருவேளை கணக்கை நீங்கள் இடைநிறுத்தப்பட்டு இருந்தால் 50 ரூபாய் அபராதம் செலுத்தி விடுபட்ட கணக்கினை மீண்டும் துவங்கிக் கொள்ளலாம்.

இந்த சேமிப்பு கணக்கை உங்களால் தொடர முடியாத போது என்ன செய்ய வேண்டும்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்ச தொகையான 250 ரூபாய் சரியாக செலுத்தவில்லை 15 வருடங்கள் கழித்து வரும்போது தபால் நிலையத்தின் இயல்பான வட்டியான வருடத்திற்கு நான்கு சதவீதமாக மட்டுமே பெற இயலும்.

முதிர்வு தொகையை எப்போது பெற்றுக் கொள்ளலாம்?

செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின் முதலிரவு தொகையை வருமான வரி விலக்கோடு 21 ஆம் ஆண்டு இறுதியில் பெறலாம் .மேலும் அந்த பெண்ணுக்கு 18 வயது நிறைவடையும்போது அவரது கல்வி அல்லது திருமண செலவுக்காக கணக்கில் உள்ள தொகையில் 50 சதவீதத்தை பெற்றுக் கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கை எப்படி இடமாற்றம் செய்யலாம்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கணக்கை வேறு வங்கிகளுக்கோ அல்லது வேறு தபால் நிலையம் கிளைகளுக்கோ மாற்ற விரும்பினால் ரூபாய் 100 கட்டணம் ஆக செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தினை முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்பதை புள்ளி விவரத்தோடு காணலாம்:

மாத முதலீடு  வருடத்திற்கு முதலீடு செய்யும் தொகை  மொத்த முதலீடு  முதிர்வு தொகை 
5,00.00 5,00.00 X 12 = 6,000.00 90,000.00 1,83,488.66
1,000.00 1,000.00 X 12 = 12,000.00 1,80,000.00 5,46,977.31
2,000.00 2,000.00 X 12 = 24,000.00 3,60,000.00 10,93,954.62
5,000.00 5,000.00 X 12 = 60,000.00 9,00,000.00 27,34,886.56
7,000.00 7,000.00 X 12 = 84,000.00 12,60,000.00 38,28,841.19
10,000.00 10,000.00 X 12 = 1,20,000.00 18,00,000.00 54,69,773.12
12,500.00 12,500.00 X 12 = 1,50,000.00 22,50,000.00 68,37,216.41

Leave a Comment

error: Content is protected !!