School Leave Tomorrow
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!
School Leave Tomorrow: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ஆண்டு தோறும் காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெறும் விழாவுக்கு முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் (08.02.2025 – சனிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள்/ கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
மேலும் அதற்கு பதிலாக வரும் (15.02.2025 – சனிக்கிழமை) அனைத்து பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும். கல்லூரிகள் மேலும், அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.