பள்ளி கல்லூரிகளுக்கு பிப்ரவரி 10ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு வெளியான ஹேப்பி நியூஸ்!
School And College Leave News Feb 10
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
நாகை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற நிலாயதாச்சியம்மன் கோயிலில் பிப்ரவரி 10ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பொதுவாக முக்கிய பண்டிகை மற்றும் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
Local Holiday News
அதேபோல் இந்த விடுமுறையானது பள்ளிகளுக்கு மட்டும் பொருந்துமா அல்லது பள்ளி, கல்லூரிகளுக்கு பொருந்துமா என்ற முடிவை மாவட்ட ஆட்சியர்கள் எடுத்து வருகின்றனர். அதன்படி பிப்ரவரி 10ம் தேதி திங்கள் கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் சப்தவிடங்க தலங்களில் ஒன்றாக திகழும் அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நிலாயதாச்சியம்மன் ஆலயம் பிரசித்திப் பெற்ற சிவன் தளமாக விளங்குகிறது.
இவ்வாலயத்தின் குடமுழுக்கு பெருவிழா வருகின்ற 10ம் தேதி திங்கள்கிழமை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகை சாபம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரும் ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
சிவ வாத்தியங்கள், தாரைதப்பட்டைகள், நாதஸ்வர கச்சேரி, குதிரையாட்டம் என கோலாகலமாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில் பெண்கள் உற்சாக நடனமாடி கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே புனிதநீர் ஊர்வலத்தில் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடியபடி மலர்தூவி புனிதநீரை சுமந்து வந்த யானையை வரவேற்றனர்.
இதனை முன்னிட்டு நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் வரும் பிப்ரவரி 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 11 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கான அரசு செய்முறை தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும்.
இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் பிப்ரவரி 15ம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாகும். இதுதொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ளார்.