புதுச்சேரி மாநில பட்ஜெட் 2025 வெளியானது சூப்பர் அறிவிப்பு!
Puducherry Budget 2025
Puducherry Budget 2025 : 2025 – 2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
₹13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து, முதலமைச்சர் ரங்கசாமி உரையாற்றி வருகிறார்.

விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ₹2,000 வழங்கப்படும் என்று பேரவையில் ரங்கசாமி அறிவித்தார்.
ரேஷன் அட்டைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச அரிசியுடன், இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும்.
அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.
வாரம் 3 நாள் வழங்கப்படும் முட்டை, இனி வாரத்தில் அனைத்து நாட்களும் வழங்கப்படும் – முதலமைச்சர் ரங்கசாமி.
6-ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று இளநிலை கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ1000, மூன்று ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்.
முதியோர் உதவி பெறும் மீனவ பெண்கள் உயிரிழப்பு ஈமச்சடங்கு தொகை ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரமாக உயர்வு.
புதுச்சேரி ஈசிஆர் பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்படும்.