மாதந்தோறும் ரூ.7400 வருமானம் பெறும் போஸ்ட் ஆபீஸின் அசத்தலான திட்டம்!!..
Post office Monthly Income Scheme Details
Post office Monthly Income Scheme Details போஸ்ட் ஆபீஸ் திட்டத்தின் மூலமாக நாம் அதிகமான அளவில் வட்டியுடன் நம் பணத்தை பெருக்கிக் கொள்ளலாம். எனவே அதில் சிறந்ததாக இருப்பது மாதாந்திர வருமானம் திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலமாக நாம் 7.4 சதவீத வட்டியை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இத்திட்டத்தை குறித்த முழு தகவல்களையும் கீழ்கண்ட பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது இச்செய்தியைப் படித்து பயன் பெறுங்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டமானது மிகவும் எல்லாராலும் அறியப்படும் திட்டமாக இருக்கிறது. இந்த தேசிய சேமிப்பு மாத வருமான திட்டத்தின் மூலமாக நாம் அதிக வருமானம் பெற முடியும். இத்திட்டத்தின் முதிர்ச்சியின் போது முதலீட்டாளர்கள் மாத வருமானத்தை பெற்றுக் கொள்ளலாம். இத்திட்டத்தில் ரூபாய் 12 லட்சம் முதலீடு செய்தால் மாதாந்திர வட்டியாக ரூபாய் 7,400 கிடைக்கும் ₹ 15 லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 9250 வட்டியாக கிடைக்கும்.
மேலும் ரூபாய் 5 லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 3083 வட்டி வருமானமும் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூபாய் 617 வட்டியாக கிடைக்கும்.
இதிட்டம் மாத வருமான திட்டத்திற்கும் பொருந்தக்கூடிய வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மதிப்பாய்வு செய்யப்படுகிறது.
மேலும் 2023 24 நிதியாண்டின் இறுதி காலாண்டில் வட்டி விகிதமானது 7.4 சதவீதமாக உள்ளது ஆண்டுதோறும் கூட்டப்பட்டு மாதந்தோறும் செலுத்தப்படும்.
வட்டி
திறக்கப்பட்ட தேதியிலிருந்து ஒரு மாதம் முடிந்தவுடன் முதிர்வு வரை வட்டி செலுத்தப்படும் எந்த வட்டிக்கும் கூடுதல் வட்டி கிடைக்காது.
முதலீடு
மாதாந்திர வருமான திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூபாய் 1000 முதலீடு செய்யலாம் அதிகபட்சமாக ₹9 லட்சம் தனித்தனியாகவும் ₹ 15 லட்சம் கூட்டாகவும் முதலீடு செய்து கொள்ளலாம்.
எனவே போஸ்ட் ஆபீஸ் அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தை பற்றி முழு விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப்பில் இணையுங்கள்.