PM கிஷான் 17வது தவணை ரூ.2000 எப்போது?.. வெளியான முக்கிய அறிவிப்பு!!
PM Kisan 17th Installment New Update 2024
PM Kisan 17th Installment New Update 2024 விவசாயிகளுக்கான பி எம் கிஷான் நிதி ஆனது ஒவ்வொரு ஆண்டும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 -த்தை மூன்று தவணைகளாக வழங்கி வருகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
நாட்டின் முதுகெலும்பாக கருதப்படுகின்ற விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் குறைந்த நிலத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கத்தோடும் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசாணது ஆண்டுதோறும் ரூபாய் 6000 வரை நிதி உதவி வழங்குகிறது.
இந்த நிதி உதவியானது பி எம் கிஷான் யோஜனா திட்டத்தின் முன் கீழ் வழங்கப்படுகிறது. இந்த 16 தவணை நிதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது பி எம் கிஷான் திட்டத்தின் 17 வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
இந்தத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக பிரதான் மந்திரி கிஷான் சமநீதி யோஜனா திட்டமானது கடந்த பிப்ரவரி 24 2019 அன்று தொடங்கப்பட்டது .இந்த திட்டம் சென்ற 2019 ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டில் அப்போதைய நிதி அமைச்சர் பியூஸ் கோயலால் அறிவிக்கப்பட்டு பின்னர் பிரதமர் மோடி அவர்களால் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலமாக தகுதியான விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் மூன்று சமத் தவணைகளில் ரூபாய் 2000 வீதம் மொத்தமாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது. விவசாயிகளுக்கான இந்த நிதி ஒவ்வொரு ஆண்டும் மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வருகின்ற ஜூன் நான்காம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட சில நாட்களில் பிஎம் கிஷான் திட்டத்தின் அடுத்த தவணை வெளியிடப்படும் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திட்டத்தில் இணைந்திருக்கும் விவசாயிகள் தங்களுக்கான தவணை நிதியை தவறவிடாமல் பெறுவதற்கு தங்கள் e-KYC-யை முடிக்க வேண்டும். பிஎம் கிசான் திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் “PMKISAN திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்டுள்ள விவசாயிகள் eKYC செயல்முறையை முடிப்பது கட்டாயம். OTP-அடிப்படையிலான eKYC ப்ராசஸானது PMKISAN அதிகாரப்பூர்வ போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC-ஐ மேற்கொள்ள அருகிலுள்ள CSC சென்டர்களை தொடர்பு கொள்ளலாம்” என கூறப்பட்டுள்ளது.
பயனாளியின் ஸ்டேட்டஸை (Beneficiary Status) எவ்வாறு சரிபார்ப்பது?
இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான pmkisan.gov.in-க்கு விசிட் செய்யவும். இப்போது உங்கள் டிஸ்ப்ளேவில் தெரியும் பேஜின் வலது பக்கத்தில் உள்ள ‘Know Your Status’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
பின் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரை என்டர் செய்து, கேப்ட்சா கோட்-ஐ நிரப்பி, ‘Get Data’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். இதனை செய்த பிறகு beneficiary status ஸ்கிரீனில் தெரியும்.
Beneficiary லிஸ்ட்டில் பெயரை சரிபார்ப்பது எப்படி?
PM Kisan திட்டத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டான www.pmkisan.gov.in-க்கு செல்லவும். இப்போது Beneficiary list என்ற டேப்-ஐ கிளிக் செய்யவும். மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் போன்ற விவரங்களை கீழ்தோன்றும் ட்ராப்-டவுனில் இருந்து தேர்ந்தெடுக்கவும். பிறகு Get report என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதன் பிறகு யூசர்களின் பட்டியல் (beneficiary list) விவரம் காட்டப்படும். தேவைப்பட்டால் 155261 மற்றும் 011-24300606 ஆகிய ஹெல்ப்லைன் நம்பர்களுக்கு கால் செய்யலாம்.
பிஎம் கிசான் சம்மான் நிதிக்கு விண்ணப்பிப்பது எப்படி? pmkisan.gov.in வெப்சைட்டிற்கு செல்லவும். New Farmer Registration என்பதை கிளிக் செய்து ஆதார் நம்பரை என்டர் செய்து captcha-வை நிரப்பவும். பிறகு தேவையான விவரங்களை என்டர் செய்து Yes-ஐ கிளிக் செய்யவும். PM Kisan அப்ளிகேஷன் ஃபார்ம் 2024-ல் கேட்கப்பட்டிருக்கும் தகவலை பூர்த்தி செய்து சப்மிட் செய்து விடவும். பின்னர் அதை save செய்து எதிர்கால தேவைக்காக பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளவும்.