மத்திய அரசின் அசத்தலான திட்டம் ரூபாய் 50,000 கிடைக்கும்!..-யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? Paramparagat Krishi Vikas Yojana Scheme Full Details 2024 Happy News

மத்திய அரசின் அசத்தலான திட்டம் ரூபாய் 50,000 கிடைக்கும்!..-யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Paramparagat Krishi Vikas Yojana Scheme Full Details 2024

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

Paramparagat Krishi Vikas Yojana Scheme Full Details 2024 கடந்த 2015 ஆம் ஆண்டு இந்திய அரசு விவசாய மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூலமாக பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் மூலமாக விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்ய அரசு நிதி உதவி வழங்குகிறது இது விவசாயிகளை இயற்கை விவசாயம் செய்ய ஊக்குவிக்கிறதும் இதனால் பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயனங்களின் பயன்பாடு வெகுவாக குறையும்.

Paramparagat Krishi Vikas Yojana Scheme Full Details 2024
Paramparagat Krishi Vikas Yojana Scheme Full Details 2024

இந்த திட்டத்தின் மூலமாக ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 50,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதன் காரணமாக எந்தவித பிரச்சனையும் இல்லாமல் பணமானது நேரடியாக விவசாயிகளை சென்று சேர்ந்து விடுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூபாய் 1,197 கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது இதனால் இந்தியாவில் இயற்கை விவசாயம் ஆனது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Paramparagat Krishi Vikas Yojana Scheme Full Details 2024

இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி

இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்கு விவசாய சாகுபடி நிலம் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் : 

பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் கீழ் விண்ணப்பிக்க சில ஆவணங்கள் கட்டாயம் ஆகும். அதன்படி, ஆதார், முவரிச் சான்று, வருமானச் சான்று, அடையாள அட்டை, ரேஷன் அட்டை, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கட்டாயம்.

விண்ணப்பிப்பது எப்படி? : 

முதலில் நீங்கள் பரம்பரகத் கிரிஷி விகாஸ் யோஜனாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். முகப்பு பக்கத்தில் அப்ளை என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை உள்ளிட வேண்டும்.

உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி, மின்னஞ்சல் முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்பி விண்ண படிவத்துடன் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு பிறகு உங்களது பதி செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு பதிவு எண் அனுப்பி வைக்கப்படும்.

Leave a Comment

error: Content is protected !!