டிப்ளமோ பாலிடெக்னிக் சிலபஸ் மாற்றம் வெளியான முக்கிய அறிவிப்பு!! Diploma Polytechnic Syllabus Change New Update 2024

டிப்ளமோ பாலிடெக்னிக் சிலபஸ் மாற்றம் வெளியான முக்கிய அறிவிப்பு!!

 Diploma Polytechnic Syllabus Change New Update 2024 

Diploma Polytechnic Syllabus Change New Update 2024 பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு தொடர்ந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
 Diploma Polytechnic Syllabus Change New Update 2024 
Diploma Polytechnic Syllabus Change New Update 2024

இதற்கான வரைவு பாடத்திட்டம் ஆனது வலைதளத்தில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் ,34 அரசு உதவி பெறும் பாலிடெக்னிகல், 46 தனியார் சுயநிதி பாலிடெக்னிக்கல் என மொத்தமாக 491 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.

இக்கல்லூரிகளில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான மூன்று ஆண்டு கால டிப்ளமோ படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த டிப்ளமோ படிப்புகளில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம். அதே நேரத்தில் பிளஸ் டூ முடித்திருந்தால் லெட்டர் என்ட்ரி முறையில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்ந்துவிடலாம்.

பொறியியலில் டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறனையும் தொழில் முனைவுத் திறனையும் மேம்படுத்தும் வகையில் பாடத்திட்டமானது அமைக்கப்படும் எனும் உயர்கல்வித்துறை கடந்த ஆண்டு அறிவித்திருந்த நிலையில் அதன் அடிப்படையில் 2023- 2024 ஆம் கல்வியாண்டில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கும் புதிய பாடத்திட்டமானது அமல்படுத்தப்பட உள்ளது. இதனை தொடர்ந்து அந்த இரு ஆண்டுகளுக்கான வரைவு பாடத்திட்டத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்கமானது https://www.dte.tn.gov.in வெளியிட்டுள்ளது.

சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் ஆகிய பாடப்பிரிவுகளுக்கான வரைவு பாடத்திட்டம் தொடர்பான கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகள் மே மாதம் 24-ம் தேதிக்குள் இணையவழியில் தெரிவிக்குமாறு மாநில தொழில்நுட்பக் கல்வி ஆணையர் கொ.வீரராகவ ராவ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அக்கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

Leave a Comment

error: Content is protected !!