புதிய ரேஷன் அட்டை வழங்க தாமதம்!- தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு!! New Ration Card Issuance of Delay TN Govt Announced

புதிய ரேஷன் அட்டை வழங்க தாமதம்!- தமிழக அரசு அதிர்ச்சி அறிவிப்பு!!

New Ration Card Issuance of Delay TN Govt Announced

 New Ration Card Issuance of Delay TN Govt Announced தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பை தமிழக அரசு ஆனது இன்று அறிவித்துள்ளது அதைப்பற்றிய முழு தகவலை நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
New Ration Card Issuance of Delay TN Govt Announced
New Ration Card Issuance of Delay TN Govt Announced

தமிழகத்தில் ரேஷன் அட்டை வாயிலாக குறைந்த விலையில் அரிசி பருப்பு, கோதுமை சர்க்கரை பாமாயில் எண்ணெய் போன்ற உணவுப் பொருட்கள் மாதமாதம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு அரசு தரப்பில் இருந்து வழங்கப்படும் அனைத்து நிவாரணங்களும் ரேஷன் அட்டை மூலமாக தான் கிடைக்கிறது.

புதியதாக திருமணம் ஆனவர்கள் ரேஷன் அட்டை வாங்க விண்ணப்பிப்பார்கள் மேலும் தொலைந்து போன ரேஷன் கார்டை திரும்ப பெறுவதற்கு அதன் நகலுக்காக விண்ணப்பிப்பார்கள் என நாளுக்கு நாள் ரேஷன் அட்டை விண்ணப்பிப்பர் உடைய எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமின்றி மகளிர் உரிமைத் தொகையை ரூபாய் ஆயிரம் பெற வேண்டும் என்பதற்காக புதிய ரேசனட்டை வாங்க விரும்புகிறார்கள் இதற்கும் விண்ணப்பித்து வருகின்றனர்.

முதலில் ரேஷன்   கார்டு விண்ணப்பிப்பவர்களுக்கு 30 முதல் 45 நாட்களில் கார்டு வந்து விடும். ஆனால் தற்போது விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் ரேஷன் கார்டு வருவதில்லை என்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ரேஷன் கார்டு அச்சடிக்கும் பணியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ளவரை புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமாகத் தான் புதிய ரேஷன் அட்டை வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

error: Content is protected !!