Mobile Phone Charge
எச்சரிக்கை! உங்க போனை 100 % சார்ஜ் பண்றீங்களா? அப்போ இதை தெரிஞ்சுக்கங்க!
Mobile Phone Charge இப்போது பெரும்பாலான ஸ்மார்ட் போன்களில் பேட்டரிக்களை தனியே வெளியே எடுக்கமுடியாத அளவுக்கு வடிவமைக்கப்படுகின்றன.

Smart Phone Charge 80% வரை மட்டுமே சார்ஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்
பொதுவாக நமது போனை சார்ஜ் செய்யும்போது 60 சதவிகிதம் சார்ஜ் ஆகும் வரை பேட்டரியின் வோல்டேஜ் அதிகமாக இருக்கும். அதன் பின்னர் அதன் பின்னர் அது படிப்படியாக குறையும். உங்கள் போனை எப்போதாவது சார்ஜ் செய்தீர்கள் என்றால் பிரச்னையில்லை. ஆனால் தொடர்ச்சியாக உங்கள் போனை 100 சதவிகிதம் வரும் வரை முழுமையாக சார்ஜ் செய்வீர்கள் என்றால் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு பேட்டரியின் ஆயுள் விரைவாக குறையும். இதன் காரணமாகவே 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்வதே சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பேட்டரி அதிக வோல்டேஜில் தொடர்ந்து இயக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் அதன் ஆயுள் நீடிக்க உதவுகிறது.

போனில் பேட்டரி ஆயுளை நீடிக்க சில சிறந்த வழிகள்
என்ன தான் நாம் கவனமாக இருந்தாலும் எல்லா பேட்டரிகளும் காலப்போக்கில் அதன் செயல் திறனை இழந்துவிடுகின்றன. நாம் 80 சதவிகிதம் வரை சார்ஜ் செய்வது அதன் ஆயுளை சற்று நீட்டிக்கும். உங்கள் தேவைக்கேற்ப இதனை கையாள்வது சிறந்தது. வீட்டில் மட்டுமல்லாமல் உங்கள் பணியிடத்திலும் சார்ஜர் வைத்திருப்பீர்கள் என்றால் 80 சதவிகிதம் சிறந்த முறையாக இருக்கும். சில நேரங்களில் பயணங்கள் மேற்கொள்ளும்போது, சார்ஜ் செய்ய ஏதுவான சூழல் இல்லாத தருணங்ளில் முன் கூட்டியே 100 சதவிகிதம் சார்ஜ் செய்துகொள்வது நல்லது. உங்கள் போனில் பேட்டரி சேவர் மோடையோ (Battery Saver Mode), அல்லது ஆப்டிமைஸ்டு சார்ஜிங் ( Optimized Charging )களை பயன்படுத்தினாலும் பேட்டரி லைஃப் நீண்ட காலத்துக்கு வரும். அதே போல இரவு முழுவதையும் சார்ஜ் செய்யாமல் இருப்பது, 20 சதவிகிதம் வரும்போதே சார்ஜ் செய்வது போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். அதிக நேரம் கேம் விளையாடினாலும் போன் ஓவர் ஹீட்டாக வாய்ப்பிருக்கிறது.