கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து இன்று வெளியான முக்கிய தகவல்!!
Magalir Urimai Thogai New Update 2024
Magalir Urimai Thogai New Update 2024 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர். அவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்ற ஒரு சிறந்த திட்டமாக கருதப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு என சில விதிமுறைகள் அரசு கொண்டு வந்திருந்தது அதன்படி குடும்பத்தில் உள்ள யாரும் வருமான வரி செலுத்துபவர்களாக இருக்கக்கூடாது. சொந்த பயன்பாட்டிற்கு என கார் வைத்திருக்கக் கூடாது உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கும் பெண் 21 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும் அது மட்டும் அல்ல மேலும் சில நிபந்தனைகளும் உள்ளன.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முதலில் அலட்சியம் காட்டியவர்களுக்கு கூட ரூபாய் ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்படுவதை பார்த்து பல பெண்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். என்று ஆர்வம் காட்டி வருகின்றனர் எனவே கூட்டு கூட்டு குடும்பத்தில் ஒரே அட்டையில் இருந்தவர்கள் கூட இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்பதற்காக புதிய ரேஷன் அட்டை வாங்குவதற்கு விண்ணப்பித்திருக்கின்றனர். அதேபோல ரேஷன் அட்டைகளும் விண்ணப்பிக்காமலே காலம் தள்ளியவர்கள் கூட உடனடியாக இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை அதிரடி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு!
இதேபோன்று லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்திருந்த காரணத்தினால் ரேஷன் அட்டைகளை விநியோகிப்பதை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கி ஆறு மாத தவணையானது செலுத்தப்பட்டு விட்ட பின்னர் என்று மார்ச் மாத தவணை வர உள்ள நிலையில் புதிய ரேஷன் அட்டைகளை விநியோகிப்பது தொடர்பான முக்கிய அறிவிப்பு தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
புதிய ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யாரேனும் வட்ட வழங்கல் அலுவலகத்திற்கு சென்று குறுஞ்செய்தியை காண்பித்து அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்குப் பின்பு ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்து பொருள்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் 45 ஆயிரத்து 59 பேருக்கு புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுகின்றன ஏற்கனவே வெள்ளம் பாதித்த சமயத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த 27 ஆயிரத்து 577 பேருக்கு புதிய அட்டைகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் அட்டைகள் மிக முக்கியமாக இருப்பதால் புதிய ரேஷன் அட்டை இல்லாதவர்கள் இத்திட்டத்தில் இணைய முடியாமல் தவித்தனர். எனவே தற்போது புதிய ரேஷன் அட்டை க்கு விண்ணப்பித்தவர்கள் தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தேர்தல் நெருங்கும் இச்சமயத்தில் அதற்கான அறிவிப்பு வெளியானால் உரிமைத்தொகை பெற முடியாதவர்களுக்கு மிகப்பெரிய ஒரு மகிழ்ச்சி செய்தியாக இது காணப்படும்.
Whatsapp- Join