தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Local Holiday March 18 Dharmapuri
Local Holiday March 18 Dharmapuri : தமிழகத்தில் அரசு விடுமுறைகளை தவிர்த்து, அந்தந்த மாவட்டங்களில் நிகழும் முக்கிய கோவில் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்.
அன்று, எவ்வித அசம்பாவிதங்களும் நிகழ கூடாது என்பதற்காக விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
அந்தவகையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவிலின் முக்கிய திருவிழாவான மாசிமக திருத்தேரோட்டம் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.
உள்ளூர் விடுமுறை
இதனால், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரூர் வருவாய் கோட்டத்திற்கு மட்டும் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் ஆர்.சதீஷ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை அன்று அரூர் கோட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பணி நாளாக வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவித்துள்ளார்.