கலைஞரின் கனவு இல்ல திட்டம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!- முழு விவரம் உள்ளே.. Kalaignar Kanavu Illam Thittam Who Can Apply Full Details 2024 Happy

Table of Contents

கலைஞரின் கனவு இல்ல திட்டம் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!- முழு விவரம் உள்ளே..

Kalaignar Kanavu Illam Thittam Who Can Apply Full Details 2024

Kalaignar Kanavu Illam Thittam Who Can Apply Full Details 2024 தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தை குறித்து யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை முழு விவரத்தோடு கீழ்கண்ட பதவியில் நாம் காணலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
Kalaignar Kanavu Illam Thittam Who Can Apply Full Details 2024
Kalaignar Kanavu Illam Thittam Who Can Apply Full Details 2024

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசானையில்,

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 3,100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு லட்சம் புதிய வீடுகளை கட்டுவதற்கான நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

Kalaignar Kanavu Illam Thittam Who Can Apply Full Details 2024

தகுதியான பயனாளிகள்

  • குடிசைகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், மற்றும் சர்வே பட்டியலில் தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டவர்கள்.

  • புதிய குடிசைகள் சர்வே மற்றும் அனைவருக்கும் வீடு சர்வே பட்டியலில் உள்ள குடிசை வீட்டு பயனாளிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

  • சொந்த நிலம், பட்டா உள்ளவர்கள் மட்டுமே அந்த இடத்தில் வீடு கட்ட தகுதியானவர்கள்.

தகுதியற்ற பயனாளிகள்

  • வாடகை குடிசை வீட்டில் குடியிருப்பவர்கள்,

  • வணிக நோக்கத்திற்காக, விலங்களுக்காக பயன்படுத்தப்படும் குடிசைகள் தகுதியற்றவையாக வரையறுக்கப்பட்டுள்ளது.

  • குடிசை வீட்டின் ஒரு பகுதி கான்கரீட், ஓடு, ஆஸ்பெஸ்டாடாஸ், உலோகத் தகடால் ஆன கூரைகளுக்கு மேல் வேயப்பட்டுள்ள குடிசை வீடுகள் தகுதியற்றவை.

  • மேலும் அரசு பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் குடிசை வீடுகளில் குடியிருந்தாலும் தகுதியற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் 

1. குடும்ப அட்டை (Ration Card)ரேஷன் கார்டு 

2. ஆதார் அட்டை (Aadhaar Card) ஆதார் கார்டு

3. கைபேசி எண் (Mobile Number) மொபைல் நம்பர்

4. பாஸ்போர்ட் ( Passport Size )அளவு புகைப்படம். 

5. ஜாதி சான்றிதழ் (Community Certificate) 

6. வருமானச் சான்றிதழ் (Income certificate) 

7. மின்னஞ்சல் முகவரி. 

வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு 

இந்நிலையில், இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை ஊரக வளர்ச்சித்துறை இயககுனர் பி.பொன்னையா வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கி உள்ளார்.

 

தமிழகத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், இந்த 2024-25ம் நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு ரூ.3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ.3100 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

“குடிசை இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில் வரும் 2030ம் ஆண்டிற்குள் தமிழகத்தின் ஊரகப்பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தர திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் தலா ஒவ்வொன்றும் 3.5 லட்சம் செலவில் உருவாக்க நெறிமுறைகள் அடங்கிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

360 சதுரஅடி கொண்ட வீடு கட்டுவதற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவுத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

*பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க உள்ளது தமிழ்நாடு அரசு*

பயனாளர்களை தேர்வு செய்யும் பணியை வரும் 25ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு. இப்பட்டியலை வரும் 30ம் தேதி நடக்கும் கிராம சபைக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெற வேண்டும்

தொடர்ந்து ஜூலை 10ம் தேதிக்குள் வீடு கட்டும் பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அறிவுறுத்தல்

இத்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட ₹3100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

 

 

Leave a Comment

error: Content is protected !!