PF பேலன்ஸ் எவ்ளோன்னு தெரியணுமா!- ஈஸியான 3 வழிகள் உங்களுக்காக இதோ..
How To EPFO Balance Check Easy 3 Steps Tamil
How To EPFO Balance Check Easy 3 Steps Tamil தொழிலாளர் வருங்கால வைப்பினை திட்டத்தின்{EPFO} மூலமாக நம் நாட்டில் செயல்படும் நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு ஓய்வு காலத்திற்கான தொகையை செலுத்தி வருகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது மற்றும் நிறுவனத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையும் பிஎப் கணக்கில் இருப்பு வைக்கப்படுகிறது.
இப்படி உங்களிடம் இருக்கும் பிடிக்கும் தொகையை உங்கள் நிறுவனம் சரியாக பிஎப் கணக்கில் டெபாசிட் செய்கிறதா? உங்களது பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு இருக்கிறது என்பதை கண்டறிவது மிகவும் எளிதாகிவிட்டது. அதைப் பற்றி நாம் இந்த பதிவு தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
மத்திய அரசின் UMANG செயலில் மூலம் நாம் எளிதாக பிஎஃப் பணத்தையும் அதில் உள்ள பேலன்ஸையும் கண்காணிக்க முடியும்.
இதற்கு முதலில் நீங்கள் பிஎப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களின் UAN Number மற்றும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணை இணைத்திருக்க வேண்டும்.
தற்போது UMANG செயலின் மூலம் எப்படி பிஎப் பேலன்ஸை தெரிந்து கொள்ளலாம் என்பதை நாம் பார்க்கலாம்.
- PLAY STORE வாயிலாக Umang செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- உங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்யவும் இதனை அடுத்து “All Services” என்பதை தேர்வு செய்யவும்.
- பின்னர் அதில் காட்டும் பட்டியலில் “EPFO” என்பதை தேர்ந்தெடுக்கவும் உங்களது பிஎஃப் பேலன்ஸ் குறித்த தகவலுக்கு “View Passbook” என்பதை தேர்வு செய்யவும்.
- இதனை அடுத்து உங்களின் UAN எண்ணை உள்ளிடவும், பின்னர் Get OTP என்பதை கிளிக் செய்யவும்.
- உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளீடு செய்து லாகின் செய்து கொள்ளவும்.
- இதனை அடுத்து ஸ்கீரினில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றுங்கள் உங்களின் பிஎஃப் இருப்பு மற்றும் பாஸ்புக் உள்ளிட்ட அனைத்தும் தகவல்களும் கிடைத்துவிடும்.
எஸ்.எம்.எஸ்( SMS) மூலம் பிஎப் பேலன்ஸை தெரிந்து கொள்வது
பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் எண்ணில் இருந்து EPFOHO என டைப் செய்து உங்களின் UAN எண்ணை டைப் செய்யவும் இதனை அடுத்து உங்களுக்கு விருப்பமான மொழியின் ஆங்கில எழுத்து முறையில் முதன் மூன்று எழுத்துக்களை உள்ளிட வேண்டும். தமிழ் மொழியில் தகவலை பெற EPFOHO UAN TAM என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். உடனே உங்களின் பிஎஃப் பேலன்ஸ் மெசேஜாக உங்களுக்கு வந்து சேரும்.
மிஸ்டு கால்:
பணியாளர்கள் EPFO எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தும் தங்கள் பிஎஃப் இருப்பை தெரிந்துகொள்ளலாம். இதை செய்ய, யுஏஎன் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து 9966044425 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். உடனே உங்களின் பிஎஃப் பேலன்ஸ், ஆதார் எண், பான் எண், கடைசியாக போடப்பட்ட தொகை ஆகியவை மெசேஜாக உங்களுக்கு வந்து சேரும்.