Education Loan Waiver Tamil Nadu Govt
மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி தமிழக அரசு அறிவிப்பு யாருக்கு கிடைக்கும்? முழு விபரம்
Education Loan Waiver Tamil Nadu Govt : தமிழகத்தை பொறுத்தவரை திராவிட முன்னேற்ற கழகம் ஆனது தேர்தல் வாக்குறுதியில் மாணவர்களுக்கான கல்வி கடன் ரத்து செய்யப்படும் என அறிவித்திருந்தார்கள் ஆனால் இதுகுறித்து அறிவிப்பு எப்போது வெளியாகும் என அனைவரும் ஆவலாக காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு புதிய அறிவிப்பு வந்துள்ளது அதைப்பற்றி நாம் முழுமையாக பார்க்கலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்தல்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 வரையிலான காலங்களில் மருத்துவம் / மருத்துவம் சார்ந்த படிப்புகள் உட்பட அனைத்து படிப்புகளுக்கும் மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை மாணாக்கர்களிடமிருந்து வசூலிக்க இயலாததன் காரணமாகவும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48,95,00,000/-ஐ (ரூபாய் நாற்பத்தெட்டு கோடியே தொண்ணூற்று ஐந்து லட்சம் மட்டும்) சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது.
Educational Loan Cancelled PDF
TN Daily News Click