நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் முக்கிய அறிவிப்பு CM Stalin Tomorrow Announce Jan23 Super update

CM Stalin Tomorrow Announce Jan23

நாளை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கும் முக்கிய அறிவிப்பு

CM Stalin Tomorrow Announce Jan23 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு அரசை பொருத்தவரையில், தமிழ், தமிழின் தொன்மை, தமிழர் நாகரீகம் தொடர்பான பல்வேறு அகழாய்வுகளுக்கு முக்கியதுவம் அளித்து அதற்கான நிதியையும் அளித்து வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
CM Stalin Tomorrow Announce Jan23
CM Stalin Tomorrow Announce Jan23

தமிழகத்தில் தற்போது 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அந்த அகழாய்வு பணிகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம்

இதன்படி, தமிழகத்தின் முக்கிய அகழாய்வாக பார்க்கப்படும் கீழடியில் கிடைக்கபெற்ற பொருட்களை வைத்து கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது. இதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

அதேபோல் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கும் நாளை அடிக்கல் நாட்டுகிறார். கீழடி இணையதளத்தையும் நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவானது நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக ஒரு அறிவிப்பை முதல்வர் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Keezhadi Excavations
Keezhadi

அதில் : நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது!
வாய்ப்புள்ளோர் வருகை தாருங்கள்! மற்றவர்கள் நேரலையில் காண வேண்டும்! என பதிவிட்டுள்ளார்.

தொல்லியல்துறை சார்ந்த முக்கிய அறிவிப்பை நாளை முதல்வர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

School College Leave News Click

Leave a Comment

error: Content is protected !!