தமிழகத்தில் 4 புதிய மாநகராட்சிகள் அறிவிப்பு – முதல்வர் அதிரடி உத்தரவு!!
Announcement of 4 New Municipal Corporations in Tamil Nadu CM Order
Announcement of 4 New Municipal Corporations in Tamil Nadu CM Order தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் புதுக்கோட்டை நாமக்கல் திருவண்ணாமலை மற்றும் காரைக்குடி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக உத்தரவிட்டுள்ளார்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
தமிழகத்தில் உள்ள நகராட்சி மற்றும் அதற்கு அருகில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் நகரமயமாகி வரும் பேரூராட்சிகளும் ஊராட்சிகளையும் ஒன்றிணைத்து தரம் உயர்த்தப் போவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது .அதன் அடிப்படையில் நான்கு புதிய மாநகராட்சியாக உருவாக்கப்படுவதாக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வெளியேற்றுள்ள அறிக்கையில் கூறியிருப்பது என்னவென்றால் தமிழ்நாடு நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது ,2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகை என்னுடைய சதவீதம் 48.45 ஆகவும் இருந்தது தற்போது மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள் தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நகர்புற பகுதிகளில் வாழ்கின்ற லட்சக்கணக்கான மக்களுக்கு நல்லதொரு வாழ்க்கை தரத்தை வழங்க இம்முடி வை தமிழக அரசு எடுத்துள்ளது.
அதுமட்டுமின்றி வரலாற்றுத் தலைநகரமாக விளங்கக்கூடிய புதுக்கோட்டை மற்றும் கோயில்களின் நகரமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை தொழில் நகரமாக விளங்கக்கூடிய நாமக்கல் மற்றும் கல்வி நகரமாக விளங்கக்கூடிய காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென கோரிக்கைகள் வைத்தனர்.
அதனை ஏற்று அன் நகரங்களையும் அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைவில் நகரமாகி வருகின்ற பேரூராட்சிகள் ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் இணைத்து புதிய மாநகராட்சி ஆக உருவாக்கப்படும் என முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.4 நகராட்சிகள், அவற்றிற்கு அருகே உள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக்குவதற்கான நடைமுறைகளை தொடங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் நோக்கத்தோடு அதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது நான்கு புதிய மாநகராட்சிகளை உருவாக்கும் நடைமுறை தொடங்கிட முதலமைச்சர அவர்கள் உத்தரவிட்டார்.