மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை அறிவிப்பு!
NTS Talent Scholarship Details
NTS Talent Scholarship Details : இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) ஆனது தேசிய திறமை உதவி தொகை (NTS) மூலம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்திவருகிறது. மேலும், இத்திட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

மேலும், இத்திட்டம் இந்தியாவில் உயர் வேளாண் கல்வியை மேம்படுத்துவதற்காக கொண்டு வரப் பட்டதாகும்.
மேலும், அகில இந்திய நுழைவுத் தேர்வு (AIEEA) மூலம் தகுதி பெற்று சொந்த மாநிலத்திற்கு வெளியே அமைந்துள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் உதவித் தொகையாக ரூ. 2,000 வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்வி மற்றும் நடத்தை குறித்து வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் இரண்டாம் ஆண்டிற்கான இந்த கல்வி உதவித்தொகை புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து வழங்கப்படுகிறது.