அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் 27 Thousand Vacancies in Anganwadi Centers

27 Thousand Vacancies in Anganwadi Centers

அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – டி.டி.வி.தினகரன் கண்டனம்

27 Thousand Vacancies in Anganwadi Centers : தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் காலிப்பணியிடங்கள் – மழலைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்வியை கூட முறையாக வழங்க மறுக்கும் திமுக அரசின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
27 Thousand Vacancies in Anganwadi Centers
27 Thousand Vacancies in Anganwadi Centers

தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 55 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் 27 ஆயிரம் ஆசிரியர் மற்றும் சமையலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

மழலைக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு மற்றும் அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையங்களில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் சமையலர்களை நியமிக்க திமுக அரசு காட்டும் மெத்தனப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் கண்டுகொள்ளாத திமுக அரசால், தற்போது ஒரே ஆசிரியர் இரண்டு அல்லது மூன்று அங்கன்வாடி மையங்களை கவனிக்கும் அளவிற்கு பணிச்சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

03.jpg

ஆசிரியர் இல்லாத அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலரே குழந்தைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் நிலவுவதால் அவர்களுக்கான ஊட்டச்சத்து உணவை உரிய நேரத்தில் வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.


எனவே, அங்கன்வாடி மையங்களில் நிலவும் ஆசிரியர் மற்றும் சமையலர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு, மழலைக் குழந்தைகளுக்கு தேவையான அடிப்படைக் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anganwadi Vacancy Search Topics

அங்கன்வாடி டீச்சர் 2025, அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 application form, அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025 கடைசி தேதி, அங்கன்வாடி உணவுகள்,

அங்கன்வாடி பதிவேடுகள், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, அங்கன்வாடி வேலை நேரம், அங்கன்வாடி பாடத்திட்டம், அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2025, Anganwadi Government job, Anganwadi Vacancy List District Wise, Anganwadi teacher Job vacancy, ICDS Anganwadi Recruitment, ICDS Supervisor Tamil Nadu, ICDS jobs, Balwadi Online Form, Haryana Asha Worker Vacancy, anganwadi recruitment 2025 tamilnadu

Anganwadi Today News Click

Leave a Comment

error: Content is protected !!