இன்றைய ராசி பலன்கள் Today Rasi Palan in Tamil 21.01.2025

Today Rasi Palan in Tamil 21.01.2025

இன்றைய ராசி பலன்கள் 21.01.2025

இன்றைய ராசி பலன்கள் தை: 𝟬𝟴 செவ்வாய் கிழமை 21.01.2025 Today Rasi Palan in Tamil 21.01.2025

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Today Rasi Palan in Tamil 21.01.2025
Today Rasi Palan in Tamil 21.01.2025

🔯 மேஷம் -ராசி: 🐐
உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். ஒப்பந்தப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். நெருக்கமானவர்கள் ஆதரவாக இருப்பார்கள். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்.

⭐அஸ்வினி : வேறுபாடுகள் நீங்கும்.
⭐பரணி : முன்னேற்றமான நாள்.
⭐கிருத்திகை : பொறுப்புகள் கிடைக்கும்.

♉ ரிஷபம் – ராசி: 🐂
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பிடித்ததை வாங்கி மகிழ்வீர்கள். மனதை  உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் விலகும். சிந்தனை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐கிருத்திகை : புத்துணர்ச்சியான நாள்.
⭐ரோகிணி : பிரச்சனைகள் குறையும்.
⭐மிருகசீரிஷம் : கவலைகள் விலகும்.

♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍
ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐மிருகசீரிஷம் : இலக்குகள் பிறக்கும்.
⭐திருவாதிரை : மாற்றம் பிறக்கும்.
⭐புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

♋ கடகம் – ராசி: 🦀
உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். பணியாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.  உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐புனர்பூசம் :  ஒத்துழைப்பான நாள்.
⭐பூசம் : நம்பிக்கை பிறக்கும்.
⭐ஆயில்யம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

♌ சிம்மம் – ராசி: 🦁
மனதளவில் இருந்துவந்த வருத்தங்கள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐மகம் : வருத்தங்கள் குறையும்.
⭐பூரம் : உதவிகள் சாதகமாகும்.
⭐உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

♍ கன்னி – ராசி: 👩
உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.

⭐உத்திரம் : நெருக்கம் அதிகரிக்கும்.  
⭐அஸ்தம் : நம்பிக்கை மேம்படும்.
⭐சித்திரை :  அனுசரித்து செல்லவும்.

♎ துலாம் – ராசி: ⚖
குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பணிகளின் தன்மைகளை அறிந்து முடிவெடுக்கவும். வாக்குறுதிகள் அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவுகள் பிறக்கும்.

மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் :  வெள்ளை நிறம்.

⭐சித்திரை : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐சுவாதி : சிந்தித்து செயல்படவும்.
⭐விசாகம் : தெளிவுகள் பிறக்கும்.

♏ விருச்சிகம் – ராசி: 🦂
அனுபவ பேச்சுக்களால் பலரையும் கவர்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் ஏற்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கல்வி பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். விவசாய பணிகளில் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும்.  பிரீதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐விசாகம் : சிந்தனைகள் மேம்படும்.
⭐அனுஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
⭐கேட்டை :  கவனம் வேண்டும்.

 

♐ தனுசு – ராசி:  🏹
சில பிரச்சனைகளுக்கு அனுபவ அறிவு கைகொடுக்கும். அலுவலகத்தில் பொறுப்பறிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவுகள் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். பணியாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐மூலம் : பொறுப்பறிந்து செயல்படுவீர்கள்.
⭐பூராடம் : மரியாதை அதிகரிக்கும்.
⭐உத்திராடம் : தெளிவுகள் பிறக்கும்.

♑ மகரம் – ராசி: 🦌
கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்திருந்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் குறையும். செயல்பாடுகளில் சில மாற்றம் ஏற்படும். தடைப்பட்ட சில  வேலைகள் முடியும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் :  சந்தனவெள்ளை நிறம்.

⭐உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.
⭐திருவோணம் : போட்டிகள் குறையும்.
⭐அவிட்டம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

♒  கும்பம் – ராசி: 🍯
ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். அரசு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகம் மூலம் நன்மை கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐அவிட்டம் : ஈடுபாடு உண்டாகும்.
⭐சதயம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐பூரட்டாதி : அனுசரித்துச் செல்லவும்.

♓ மீனம் – ராசி:  🐟
வியாபாரம் நிமித்தமான சில வியூகங்களை அமைப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தனவரவு ஓரளவு இருக்கும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். நிதானமான பேச்சுகள் நன்மதிப்பை உருவாக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐பூரட்டாதி : வியூகங்களை அமைப்பீர்கள்.
⭐உத்திரட்டாதி :  அனுசரித்துச் செல்லவும்.
⭐ரேவதி : பொறுமை வேண்டும்.

இனி சிக்னல் பிரச்சனை கிடையாது.. BSNL, Jio, Airtel வெளியான முக்கிய அறிவிப்பு Signal Problems end Good News for Jio Bsnl Airtel users 2025

Job News today

Today Results

 

Leave a Comment

error: Content is protected !!