மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய ரேஷன் கார்டு பெற 3 லட்சம் பேர் விண்ணப்பம்-வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! TN New Ration Card Apply 3 lakhs

மகளிர் உரிமைத்தொகைக்காக புதிய ரேஷன் கார்டு பெற 3 லட்சம் பேர் விண்ணப்பம் -வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

TN New Ration Card Apply 3 lakhs

TN New Ration Card Apply 3 lakhs: புதிய ரேஷன் கார்டு மூன்று லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர் அதை குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நிதி உதவி மற்றும் நலத்திட்டங்களை தமிழக முதல்வர் அவர்களால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், பெண்கள் பொருளாதாரத்தில் மற்றவர்களை சார்ந்து இருக்கக்கூடாது என்பதற்காக “கலைஞர் உரிமை தொகை” என்ற திட்டத்தை  கடந்த 2023ம் ஆண்டு முதல் முதல்வரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
TN New Ration Card Apply 3 lakhs (1)
TN New Ration Card Apply 3 lakhs (1)

அந்த வகையில், சமீபத்தில் மகளிர் உரிமை தொகை பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி, மகளிர் உரிமை தொகை ரேஷன் கார்டுகள் மூலம் வழங்கப்படுவதால், இதுவரை ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் கடந்த 2 மாதங்களாக புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தற்போது மகளிர் தொகை பெறுவதற்கு புதிதாக ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், இதன்மூலம் 3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!