TNPSC Group 4 2024 Easy Pass Ideas in Tamil
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு 2024 எளிதில் வெற்றி பெற சூப்பர் வழி
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு வைத்து பணியாளர்களை நியமித்து வருகிறது. TNPSC Group 4 2024 Easy Pass Ideas in Tamil டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை ஒவ்வொரு ஆண்டும் பல லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்கள் எழுதி வருகிறார்கள். சில நூறு காலியான இடங்களுக்கு லட்சக்கணக்கில் தேர்வர்கள் தேர்வு எழுதி, அதில் சிறந்த மதிப்பெண்கள் பெறுபவர்கள் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
குரூப் 4 தேர்வு எந்தெந்த பதவிகளுக்காக நடத்தப்படுகிறது?
- ஜூனியர் உதவியாளர் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அல்லாத).
- பில் கலெக்டர்.
- தட்டச்சு செய்பவர்.
- ஸ்டெனோ-டைப்பிஸ்ட் (கிரேடு -3).
- கள ஆய்வாளர்
குரூப் 4 தேர்வு (TNPSC Group 4 Exam) மேலே குறிப்பிட்டுள்ள 6 அரசு துறை பதவிகளுக்காக நடத்தப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 29 PSC தேர்வுகள் நடத்தப்படுகிறது. அதாவது ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வின் நேரம் மற்றும் தேர்வுக்கான தேதி மாநிலங்களுக்கு ஏற்றார் போல மாறுபடும்.
தேர்வுக்குத் தயாரா?
தேர்வுக்கு, படிக்கின்ற நேரத்தை அட்டவணையிட்டு தினமும் படியுங்கள். தினமும் 4 மணி நேரம் தமிழ் பகுதிக்கு ஒதுக்கி கொள்ளுங்கள். கணிதப் பகுதிக்கு தினமும் 1 மணி நேரத்திற்கு மேல் ஒதுக்குங்கள். மீதமுள்ள 4-6 மணி நேரத்தை பொது அறிவு பகுதிக்கு ஒதுக்கி படியுங்கள்.
தமிழ்ப் பாடம்
முதல் பகுதியான தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகின்றன. நாம் மிக முக்கியமாக படிக்க வேண்டிய பகுதி இதுதான். இதில் 95 வினாக்களுக்கு மேல் சரியாக விடையளிக்க வேண்டும் என டார்கெட் வைத்து படிக்க வேண்டும். இதற்கு 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களை படிக்க வேண்டும்.
கணிதம் கவனம்
கணித பகுதி வினாக்களில் நாம் நன்றாக பயிற்சி செய்தால் 25 வினாக்களில் 23-25 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கலாம். இதில் விகிதம், இலாபம்-நட்டம், அளவீடுகள், சதவீதம், வட்டி கணக்குகள், இயற்கணிதம் போன்ற பகுதிகளில் இருந்து தான் அதிக வினாக்கள் கேட்கப்படுகின்றன. இதற்கு 6-10 வரையிலான பள்ளிப் பாடப்புத்தகங்களை படித்தாலே 25 வினாக்களுக்கும் விடையளிக்கலாம்.
பொது அறிவு முக்கியம்:
பொது அறிவுப் பகுதியில் 75 வினாக்கள் கேட்கப்படும். இதில் 60-65 வினாக்களுக்கு சரியாக விடையளிக்கும் வகையில் தயாராகிக் கொள்ளுங்கள். இதில் அரசியலமைப்பு, இந்திய தேசிய இயக்கம், புவியியல், வரலாறு, அறிவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். அதேநேரம் புதிதாக யூனிட் 8 (தமிழ்நாடு மரபு, பண்பாடு, இலக்கியம்) மற்றும் யூனிட் 9 (தமிழ்நாடு வளர்ச்சி நிர்வாகம்) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்வாணையம் வெளியிட்டுள்ள மாதிரி வினாத்தாளில் இந்த இரு யூனிட்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிப் பாடப்புத்தகங்களை மிஸ் செய்யாதீர்கள்:
9 மற்றும் 10 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளியுங்கள். இவ்விரு புத்தகங்களில் இருந்து அதிகப்படியான வினாக்கள் கேட்கப்பட்டு வருகின்றன. அடுத்தப்படியாக 6,7,8 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படித்துக் கொள்ளுங்கள். சுமார் 10 வினாக்கள் 6-10 ஆம் வகுப்பு புத்தகங்களை தாண்டி வெளியில் கேட்கப்படலாம். இதற்கு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை படித்துக் கொண்டாலே போதுமானது. ஆனால் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு புத்தகங்களை முழுமையாக படிக்க தேவையில்லை.
குரூப் 4 தேர்வுக்கான பாடத்திட்டம் பெரும்பாலும் பள்ளி பாடப் புத்தகங்களை ஒட்டியே உள்ளதால், பள்ளி புத்தகங்களை முழுமையாக படித்து பயிற்சி பெற்றாலே தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
TNPSC Group 4 2024 Easy Pass Ideas in Tamil
200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்: குரூப் 4 தேர்வு முறை எப்படி?
மொத்தம் 200 கேள்விகளுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடத்தப்படும். முதல் 100 கேள்விகள் தமிழ் சார்ந்து கொள்குறி வகையில் கேட்கப்படும். பொது அறிவு பகுதியில் இருந்து 75 கேள்விகளும் கணக்கு மற்றும் நுண்ணறிவு பகுதியில் இருந்து 25 கேள்விகளும் கேட்கப்படும். மொத்தம் 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும்.
முதல் பகுதியில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் பெற்றவர்களின் தேர்வுத்தாள் மட்டுமே திருத்தப்படும். மொத்தம் 90 மதிப்பெண்களைக் குறைந்தபட்சம் தேர்வர்கள் பெற வேண்டும். அவர்களின் பெயர்கள் மட்டுமே தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும்.
TNPSC தேர்வுக்கு குறுகிய நாட்களே உள்ளதால், நாம் தேர்வுக்கு தயாராவதற்கு தெளிவாக திட்டமிட வேண்டும். தேர்வுக்கு குறைந்தது ஆறு மாதங்களுக்கு முன்பே நாம் படிக்க தொடங்க வேண்டும். TNPSC தேர்வில் ஒவ்வொரு தாளும் பத்துக்கும் மேற்பட்ட பாடங்களை உள்ளடக்கியிருப்பதால், ஓரிரு மாதங்கள் போதுமானதாக இருக்காது. அப்படி ஓரிரு மாதங்களில் நீங்கள் படிக்க ஆரம்பித்தால், நாமப்பாடம் செய்ய முடியுமே தவிர, எதையும் ஆராய்ச்சி செய்து படிக்க முடியாது.
முந்தைய தேர்வுத் தாள்களைப் பயிற்சி செய்யுங்கள்:
நாம் எவ்வளவுதான் தேர்வுக்கு தயாரானாலும் தேர்வு அறைக்குள் நுழைந்ததும் நமக்குள் இருக்கும் பதட்டம் நம்மை தோற்கடித்துவிடும். எனவே, உங்களை வெற்றிபெறச் செய்ய நீங்கள் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள்களைப் பயிற்சி செய்ய வேண்டும். அது தவிர, நண்பர்களிடமிருந்து குறிப்புகளை கடன் வாங்குவதை விட, புத்தகங்களிலிருந்து நீங்கள் அதிகம் படிக்க வேண்டும். நீங்கள் எழுத இருக்கும் TNPSC தேர்வுத் தாள்களின் பேட்டர்ன் பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
தினமும் ஒரே படிப்பு முறையை பின்பற்றுங்கள்:
TNPSC தேர்வுக்கு தயாராவதற்காகவே ஒரு நடைமுறை கால அட்டவணையை நீங்கள் முதலில் உருவாக்க வேண்டும். அதை உங்கள் அறையில், உங்கள் கண்ணில் படும்படி ஒட்டுவைக்கவும். அதில், காலை எழுவதில் இருந்து இரவு உறங்க செல்லும் வரை அனைத்து செயல்களையும் குறிப்பிட வேண்டும். குறிப்பாக, ஒரு பாடத்திற்கு எவ்வளவு நேரம் எடுக்க வேண்டும், எந்த நேரத்தில் எந்த பாடத்தை படிக்க வேண்டும். தினசரி தேர்வுக்கான நேரம் என அனைத்தையும் புத்திசாலித்தனமாக திட்டமிட வேண்டும். ஒரு நல்ல தொடக்கம் இறுதியில் வெற்றிகரமான சாதனையாக மாறும் என்பதை நீங்கள் நம்ப வேண்டும். இந்த திட்டத்தை தினமும் பின்பற்றுங்கள்.
கடினமான தலைப்புகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்:
வீட்டில் இருந்தபடி நீங்கள் TNPSC தேர்வுக்கு தயாராகும் போது, உங்களுக்கு எப்போதும் அதிக நேரம் கிடைக்கும். எனவே, நீங்கள் கடினமாக நினைக்கும் பாட தலைப்புகளுக்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். எளிமையான தலைப்புகளை படிப்பதற்கு குறைந்த நேரத்தை திட்டமிடுங்கள். எடுத்த உடனே மிகவும் கடினமான தலைப்புடன் தயாரிப்பைத் தொடங்க வேண்டாம். ஏனென்றால், நாம் புதிய விஷயங்களை படிக்கையில் அதிக நேரம் தேவைப்படும். அத்துடன், அது உங்களை எளிதில் குழப்பிவும் என்பதையும் மனதில் வைக்க வேண்டும்.
மாதிரி தேர்வுகள்:
மாதிரி தேர்வுகளை பயிற்சி செய்வது தேர்வு அன்று மிகவும் பயனுள்ளதாக அமையும். வாரத்தின் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முறை மாதிரி தேர்வுகளை எழுதி பார்ப்பது நல்லது. இதனை தொடர்ந்து தேர்வு நேரங்களில் ஓய்வு உடலுக்கு மிகவும் அவசியமானவை. அதிக நேரம் விழித்திருப்பது சோர்வை ஏற்படுத்தும் ஆகையால் தேர்வுக்கு முந்தைய நாட்களில் ஓய்வு எடுத்துக் கொள்வது தேர்வு அன்று புத்துணர்ச்சி ஏற்பட பயனுள்ளதாக அமையும்.
மாதிரி வினாக்கள்:
கடைசி மூன்று ஆண்டுகளாக நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்களை சேகரித்து அதை மாதிரியாக கொண்டு பாடத்திட்டங்களை படிப்பது பயன் தரும்.
கலந்துரையாடல்:
தேர்விற்கு தயாராகும் போது ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் வினாக்களில் மீதான கலந்துரையாடல்களை சக போட்டியாளர்களுடன் விவாதிப்பது செய்வது மேலும் பல்வேறு சந்தேகங்களை தீர்க்க வல்லதாக அமையும்.
இறுதியான டிப்ஸ்:
மேலும் தினசரி செய்தித்தாள்கள் படிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும். இத்தேர்வில் பாடத்திட்டம் பள்ளி பாடப் புத்தகங்களில் பெரும்பாலும் உள்ளது. அதனால் பள்ளி பாடப்புத்தகங்களை நன்றாக படித்து கொள்வது காட்டாயம். பள்ளிப் புத்தகங்களை முழுவதுமாகப் படித்து முயற்சி செய்தால் தேர்வுகளுக்கு நல்ல முறையில் தயாராகலாம்.