தமிழகத்தில் 12th ரிசல்ட் 2024 மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்% முழு விவரம் வெளியீடு!
TN 12th Result 2024 District Wise Pass Percentage Notification
TN 12th Result 2024 District Wise Pass Percentage Notification தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஆனது இன்று வெளியாகியுள்ள நிலையில் தற்போது TN 12th Result 2024 தமிழகத்தில் தேர்ச்சி விகிதத்தை மாவட்டம் வாரியாக எவ்வளவு என்பதை பற்றி தற்போது இந்த பதிவில் தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவானது வெளியாகி உள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
TN 12th Result 2024
இந்தத் தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22 ஆம் தேதி வரை நடந்து முடிந்தது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை TN 12th Result 2024 சுமார் 7,80,550 பேர் இதில் தனித்தேர்வர்கள் 8,190 பேரும் அடங்குவர் இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணிகள் 83 மையங்களில் நடைபெற்று வந்தது இதில் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது TN 12th Result 2024 பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவானது வெளியாகி உள்ளது. இதில் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதமானது 96.70% ஆகவும் அரசு பள்ளிகளில் 91.32% அரசு உதவி பெறும் பகுதிகளில் 95.49 சதவீதமாகவும் தேர்ச்சி விகிதம் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டை விட தேர்ச்சி வீதமானது 0.58 சதவீதம் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்வு முடிவுகளை காணலாம் அதற்கான லிங்க் குறித்து முழு விவரங்கள்
www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ,www.tnresults.nic.in
12 ஆம் வகுப்பு தேர்வில் முதல் இடத்தில் திருப்பூர் (97.45%), 2வது இடத்தில் ஈரோடு மற்றும் சிவகங்கை (97.42%), 3வது இடத்தில் அரியலூர் (97.25%) ஆகிய மாவட்டங்கள் பிடித்துள்ளது. TN 12th Result 2024 கடைசி இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் (90.47%) உள்ளது.
TN 12th Result 2024 இப்படியான நிலையில் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம் பற்றி கீழே விரிவாக காணலாம்.
மாவட்டம் | தேர்ச்சி விகிதம் |
சென்னை | 94.48% |
செங்கல்பட்டு | 94.71% |
காஞ்சிபுரம் | 92.28% |
திருவள்ளூர் | 91.32% |
கடலூர் | 94.36% |
விழுப்புரம் | 93.17% |
திருவண்ணாமலை | 90.47% |
அரியலூர் | 97.25% |
பெரம்பலூர் | 96.44% |
கள்ளக்குறிச்சி | 92.91% |
திருவாரூர் | 93.08% |
தஞ்சாவூர் | 93.46% |
மயிலாடுதுறை | 92.38% |
நாகப்பட்டினம் | 91.19% |
திருப்பத்தூர் | 92.34% |
வேலூர் | 92.53% |
திருச்சி | 95.74% |
கரூர் | 95.90% |
புதுக்கோட்டை | 93.79% |
தர்மபுரி | 93.55% |
கிருஷ்ணகிரி | 91.87% |
சேலம் | 94.60% |
ஊட்டி | 94.27% |
திருநெல்வேலி | 96.44% |
தென்காசி | 96.07% |
ராமநாதபுரம் | 94.89% |
தேனி | 94.65% |
மதுரை | 95.19% |
திண்டுக்கல் | 95.40% |
கோயம்புத்தூர் | 96.97% |
திருப்பூர் | 97.45% |
தூத்துக்குடி | 96.39% |
கன்னியாகுமரி | 95.72% |
விருதுநகர் | 96.64% |
நாமக்கல் | 93.49% |
சிவகங்கை | 97.42% |
ஈரோடு | 97.42% |
ராணிப்பேட்டை | 92.28% |
காரைக்கால் | 87.03% |
புதுச்சேரி | 93.38% |
* தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணவர்களின் எண்ணிக்கை 5603. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5161. (92.11%)
* தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 125. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 115 (92%)
* இத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகள் முழு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.