பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் என்ன? TNEA 2024 online application Details in tamil,fees, Last Date

TNEA 2024 online application Details

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தேவையான விவரங்கள் என்ன?

TNEA 2024 online application Details : பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் எந்தெந்த படிப்புக்கு சேர வேண்டும் எந்தெந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என பல்வேறு மனநிலையில் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் அனைத்து விதமான தங்களுக்கு விருப்பமுள்ள படிப்புக்கு விண்ணப்பிக்கும் முறையானது தற்சமயம் நடைமுறைகள் உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TNEA 2024 online application Details
TNEA 2024 online application Details

அந்த வகையில் பொறியியல் படிப்புக்கு படிக்க விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்து கவுன்சிலிங் முறையில் மாணவர்கள் தங்கள் விரும்பும் கல்லூரிகளில் தேர்ந்தெடுத்து பொறியியல் படிப்பு படிக்கலாம் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது. விண்ணப்பத்தை பூர்த்திசெய்யும் முன் மாணவர்கள் வைத்திருக்க வேண்டிய விவரங்கள் என்னென்ன என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (மே 6) முதல் தொடங்கியது. மேலும், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10-இல் வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான விண்ணத்தை மாணவர்கள் பூர்த்தி செய்யும்முன் கையில் முக்கியமான விவரங்களை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அதில், சாதிச் சான்றிதழ், அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான உறுதிக் கடிதம், மாணவர்களின் கல்வி மேலாண்மைத் தகவல் மைய எண் எனப்படும் இஎம்ஐஎஸ் எண், ஆதார் எண், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போன்றவற்றை வைத்துக் கொண்டு மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 445-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாகின. இதைத் தொடா்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் வகையில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கான இணையவழி விண்ணப்ப பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.

தேவையான விவரங்களின் பட்டியல் கீழே

இதையடுத்து, பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மாணவா்கள் பிஇ., பி.டெக் மற்றும் பி.ஆா்க். ஆகிய இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு இணையதளத்தில் ஜூன் 6-க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்சி., எஸ்டி., எஸ்சிஏ பிரிவினருக்கு ரூ.250 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இணையவழியில் விண்ணப்பிக்க இயலாத மாணவா்களின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் 110 தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சேவை மையம் குறித்த விவரங்களை, இணையதளத்தில் மாணவா்கள் அறியலாம். விண்ணப்ப பதிவு தொடா்பாக மாணவா்களுக்கு சந்தேகங்கள் இருப்பின், 1800-425-01110 என்ற எண்ணுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடா்பு கொண்டு கேட்டறியலாம். மேலும், மின்னஞ்சல் முகவரிக்கும் தொடா்பு கொள்ளலாம்.

TNEA 2024 online application Details
TNEA 2024 online application Details
TNEA விண்ணப்பப் படிவம் 2024: தேதிகள்
எஸ்.
எண்
நிகழ்வுகள் தேதிகள் 
A 1) அறிவிப்பு வெளியீடு
2) ஆன்லைன் பதிவு தொடங்குதல்
3) விண்ணப்பங்களை நிரப்புதல்
4) அசல் சான்றிதழ்களை பதிவேற்றம்
மே 6, 2024
B 1) ஆன்லைன் விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 6, 2024
2) ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான கடைசி தேதி ஜூன் 12, 2024
C ரேண்டம் எண்ணை வழங்குதல் ஜூன் 12, 2024
D TFC இல் சான்றிதழ் சரிபார்ப்பு (ஆன்லைன்) ஜூன் 13, 2024 முதல் ஜூன் 30, 2024 வரை
E தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஜூலை 10, 2024
F குறைகளை நிவர்த்தி செய்தல் ஜூலை 11, 2024 முதல் ஜூலை 20, 2024 வரை
G சிறப்பு இட ஒதுக்கீடு வகைகளுக்கான ஆலோசனை (ஆன்லைன்)
i. மாற்றுத் திறனாளிகள்
ii. முன்னாள் படைவீரர்கள்
iii. விளையாட்டு
ஏஐசிடிஇயின் கல்வி அட்டவணையின்படி
கவுன்சிலிங் தேதிகள் புதுப்பிக்கப்படும்
H பொது ஆலோசனை (ஆன்லைன்)
1) கல்வி
2) அரசு. பள்ளி 7.5% வகை
3) தொழிற்கல்வி
I துணை ஆலோசனை (ஆன்லைன்)
J எஸ்சிஏ முதல் எஸ்சி கவுன்சிலிங் (ஆன்லைன்)
K ஆலோசனையின் முடிவு

 

TNEA 2024 apply online Link

Arts and Science College Apply online Link

Leave a Comment

error: Content is protected !!