TNDTE COA Exam August 2024 தேர்வு நாள், தகுதி, விண்ணப்பிக்க கடைசி நாள் முழு விபரம் Check Now

TNDTE COA Exam August 2024

தேர்வு நாள், தகுதி, விண்ணப்பிக்க கடைசி நாள் முழு விபரம்

TNDTE COA Exam August 2024 தேர்வு நாள், தகுதி, விண்ணப்பிக்க கடைசி நாள் முழு விபரம்

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
  • அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகஸ்ட் மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் நடத்தப்படும் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
  • தட்டச்சு சுருக்கெழுத்து தமிழ் மற்றும் ஆங்கிலம் கணக்கியல் அரசு கணினி சான்றிதழ் தேர்வு ஆகிய வணிகவியல் தொழில்நுட்ப தேர்வுகளை மாநில தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தி வருகிறது.
  • இந்த நிலையில் ஆகஸ்ட் – அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிப்பை தொழில்நுட்பக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
  • இது தொடர்பாக தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத்தின் தலைவரும் தொழில்நுட்பக் கல்வி ஆணையருமான கோ வீரராகவர் ராவ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளது என்னவென்றால், ஆகஸ்ட் பருக அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான அறிவிக்கை ஜூன் மாதம் இரண்டாம் தேதி வெளியிடப்படும்,
  • இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 5-ம் தேதி தொடங்கி ஜூன் 30-ம் தேதி முடிவடையும் கருத்தியல் தேர்வு ஆகஸ்ட் மூன்றாம் தேதியும் செய்முறைத் தேர்வு நான்காம் தேதியும் நடத்தப்படும்.
  • தேர்வு முடிவுகள் செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
  • TNDTE COA Exam August 2024
    TNDTE COA Exam August 2024

தமிழக அரசு பணியில் தட்டச்சர் சுருக்கெழுத்து தட்டச்சர் தலைமைச் செயலக நிருபர் தமிழ் மற்றும் ஆங்கிலம் பதவிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதி இல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வு தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்தாலும் தகுதி காண் பருவத்துக்குள் அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் அப்போதுதான் பணி வரன்முறை செய்யப்படும்.

ஒருவேளை கம்ப்யூட்டர் சயின்ஸ் தொடர்பான பாடங்களில் பட்டம் பெற்றிருப்பவருக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சியில் இருந்து விளக்கு அளிக்கப்படுகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உதவி சுற்றுலா அலுவலர் தேர்வு மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகளாக இருந்தால் மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.எனவே இது மாணவர்களுக்கு மிக முக்கிய தகவலாக பார்க்கப்படுகிறது.

https://dte.tn.gov.in/coa-notification-aug-2024-reg

மேலும் கல்வி சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

COA Notification 2024
COA Notification 2024

Leave a Comment

error: Content is protected !!