BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!![ பள்ளி திறந்த முதல் நாளே இது உங்களுக்கு வழங்கப்படும்!! TamilNadu Schools Provided Free Note Books For Students In June 10

தமிழக பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்!![ பள்ளி திறந்த முதல் நாளே இது உங்களுக்கு வழங்கப்படும்!!

TamilNadu Schools Provided Free Note Books For Students In June 10

TamilNadu Schools Provided Free Note Books For Students In June 10 தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்ற மாணவர்களுக்கான இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் ஆகியவை பள்ளிகள் தொடங்கும் முதல் நாளான ஜூன் 10ஆம் தேதியே வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TamilNadu Schools Provided Free Note Books For Students In June 10
TamilNadu Schools Provided Free Note Books For Students In June 10

மேலும் தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளிக்கு ஜூன் 10ஆம் தேதி வருகை புரிய உள்ளனர் இவ்வாறு பள்ளிகள் திறக்கப்படும் நாளிலேயே மாணவ மாணவிகளுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை வழங்கிட அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இலவச புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை மாவட்டம் வாரியாக பிரித்து அனுப்பும் பணிகள் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடந்து வருகிறது.திருநெல்வேலி மாவட்டம் மாவட்டம் முழுமையாக மாணவ மாணவிகளுக்கு தேவையான நோட்டு புத்தகங்கள் ஆகியவை பேட்டை காமராஜர் மேல்நிலைப் பள்ளியில் மொத்தமாக இறக்கப்பட்டுள்ளன.

TamilNadu Schools Provided Free Note Books For Students In June 10

அங்கிருந்து ஒவ்வொரு பள்ளியின் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை ஏற்ப நோட்டுப் புத்தகங்கள் பிரித்து அனுப்பப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை வழங்கிடும் வகையில் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி புத்தகங்களை பெற்று சென்றுள்ளனர். அவர்களை தொடர்ந்து அரசு உதவி பெறும் பட்டியில் இருந்து ஆசிரியர்கள் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட புத்தகங்களை பெற்று சென்றுள்ளனர்.

கல்வி அலுவலக அதிகாரிகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளின் மொத்த எண்ணிக்கை சரி பார்த்து அதற்கு ஏற்ப நோட்டு புத்தகங்களை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலியில் மாவட்டத்தில் மொத்தமாக 149 அரசு நடுநிலைப் பள்ளிகளும் 154 அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளும் 93 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் 84 அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன.

மொத்தத்தில் மாவட்டத்தில் உள்ள 380 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த நோட்டு புத்தகங்கள் பள்ளி துவங்கும் முதல் நாளான ஜூன் 10ஆம் தேதியை மாணவ மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள எங்கள் whatsapp குரூப் இணையுங்கள்.

Leave a Comment

error: Content is protected !!