செல்போன் எடுத்துச் செல்ல தடை- தமிழக தேர்தல் ஆணையர் அதிரடி அறிவிப்பு!!
Mobile Not Allowed In Voteing Place In Tamilnadu News In Tamil
Mobile Not Allowed In Voteing Place In Tamilnadu News In Tamil நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார் அதைப்பற்றிய முழு தகவலை கீழ்க்கண்டவற்றுள் காணலாம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆனது முடிய உள்ள நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ம் தேதி அன்று நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
செல்போன் எடுத்துச் செல்ல தடை
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் நடைபெற உள்ள தேர்தலில் முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான பல்வேறு உத்தரவுகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகு அவர்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.