133 தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அதிமுக கட்சி

அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த அறிவிப்புகள் என்னவென்று பார்ப்போம்.

மகளிர் உரிமைத்தொகை நாடு முழுவதும் உள்ள ஏழைப் பெண்களுக்கு ரூ.3000 ஆக உயர்த்தப்படும்

100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக மாற்றி ஊதிய உயர்வு வழங்குவதற்கான கோரிக்கை வைக்கப்படும்.

நீட் தேர்வுக்கு பதிலாக பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தல் வைக்கப்படும்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர் எரிவாயு வழங்கப்படும்

உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிறப்பம்சங்களை கொண்ட அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது