2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிப்பு

மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்படும்.முதல் கட்ட தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதியில் தமிழக முழுவதும் ஒரே கட்டமாக நடைபெறும்

வேட்பு மனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கப்படும் எனவும் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாம் முறையாக ஆட்சி பிடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது

மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவானது ஏப்ரல் 26 ஆம் தேதியும் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவானது மே 7-ம் தேதியும் நான்காம் கட்ட வாக்குப்பதிவானது மே 13ஆம் தேதியும் 5-ம் கட்ட வாக்குப்பதிவானது மே இருபதாம் தேதியும் ஆறாம் கட்ட வாக்குப்பதிவானது மே 25ஆம் தேதியும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவானது ஜூன் ஒன்றாம் தேதியும் நடத்தப்படும்.

தமிழகத்தில் ஏப்ரல் 19ல் நாடாளுமன்ற தேர்தல்   வேட்பு மனுத்தாக்கல் துவக்கம்: மார்ச் 20  வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள்: மார்ச் 27  வேட்பு மனுபரிசீலனை: மார்ச் 28   திரும்பப் பெற கடைசி நாள்: மார்ச் 30  வாக்குப்பதிவு: ஏப்ரல் 19  வாக்கு எண்ணிக்கை: ஜூன் 4

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் -தலைமை தேர்தல் ஆணையர்.