வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டி தேர்தல் பணியானது நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் மக்களிடையே பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் மிக முக்கியமான ஒன்றைக் குறித்து நாம் இப்போது காணலாம்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. மக்களவை உறுப்பினர்களின் உடைய பனிக்கால முடிவடைந்து புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் நோக்கம் என்னவென்றால் 100% வாக்கு கொண்ட தேர்தலாக இந்த தேர்தல் அமைய வேண்டும் என்பதே ஆகும். எனவே இதற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வாக்காளர்கள் கல்வி மற்றும் பணியின் சூழ்நிலை காரணமாக ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு இடம்பெயர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது .இதனால் அவர்கள் அந்த நாளன்று வாக்களிக்கும் முன் வருவதில்லை.

எனவே ஓட்டுப்பதிவு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்நிலையில் ஓட்டுப்பதிவு நாள் அன்று மட்டும் பொதுமக்கள் வாக்களிக்க செல்ல வசதியாக நகர பேருந்துகளில் இலவசமாக பயணிக்க அரசாங்கம் அனுமதி அளிக்க வேண்டும் என்று மக்கள் சார்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த தகவல் என்னவென்றால் இதற்காக தேர்தல் கமிஷனும் ,மாநில அரசும் செலவை பங்கிட்டு கொள்ளலாம் என்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய ஊழியர்களும் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.