Textile Sector Employment
ஜவுளி துறையில் வெளியாகிவுள்ள குரூப் பி, சி காலியிடங்கள் தகுதி, சம்பளம் Textile sector employment
1. Quality Assurance Officer (Lab): 4 இடங்கள் (பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 21 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: அறிவியல்/ டெக்னாலஜி பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டெக்ஸ்டைல்ஸ் கெமிஸ்ட்டிரி பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

2. Field Officer: 3 இடங்கள் (பொது). வயது: 22 லிருந்து 28க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: கணிதம்/புள்ளியியல்/பொருளியல்/வணிகவியல்/ வணிக மேலாண்மை பிரிவில் இரண்டாம் வகுப்பில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Librarian: 1 இடம் (பொது). வயது: 20 லிருந்து 27க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: ஏதாவது ஒரு அறிவியல் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் நூலக அறிவியலில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Accountant: 2 இடங்கள் (பொது). வயது: 25 லிருந்து 30க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: பி.காம் தேர்ச்சியுடன் 4 அல்லது 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. Junior Quality Assurance Officer: (Laboratory): 7 இடங்கள் (பொது-4, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்சி-2). வயது: 19 லிருந்து 25க்குள். சம்பளம்: ரூ.29,200-92,300. தகுதி: அறிவியல்/டெக்னாலஜியில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டெக்ஸ்டைல்ஸ் கெமிஸ்ட்டிரியில்.
6. Junior Investigator: 2 இடங்கள் (பொது-1, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 22 லிருந்து 22க்குள். தகுதி: கணிதம்/புள்ளியியல்/பொருளியல்/ வணிகவியல் பிரிவில் இரண்டாம் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
7. Junior Translator: 1 இடம் (பொது). வயது: 20 லிருந்து 30க்குள். சம்பளம்: ரூ.35,400- 1,12,400. தகுதி: இந்தி/ஆங்கிலம் பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் இந்தியிலிருந்து ஆங்கிலம் மற்றும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
8. Senior Statistical Assistant: 1 இடம் (பொது). வயது: 22 லிருந்து 28க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.29,200-92,300. தகுதி: கணிதம்/புள்ளியியல் பிரிவில் இரண்டாம் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
9. Junior Statistical Assistant: 1 இடம் (பொது). வயது: 20 லிருந்து 25க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: கணிதம்/புள்ளியியல்/பொருளியல்/வணிகவியல் பிரிவில் இரண்டாம் வகுப்பில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: ரூ.1000/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.textilescommittee.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2025.