ஜூலை 29-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாணவர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்!..
School and College Local Holiday July 29
School and College Local Holiday July 29 தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்த மாவட்டத்தில் உள்ள சிறப்பான முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளுக்கு மக்கள் சென்று கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் உள்ளூர் விடுமுறை வழக்கமாக விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது .அந்த வகையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29ஆம் தேதி திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்த மாவட்ட ஆட்சியர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் சென்னைக்கு மிக அருகில் உள்ள திருவள்ளுவர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடி கிருத்திகை விழா வெகு சிறப்பாக கொண்டாடும் வகையில் இக்கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக இந்த உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகிற ஜூலை 29ஆம் தேதி ஆனது திருத்தணியில் லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய வருவார்கள் இந்த பக்தர்களானது உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதை ஒட்டி திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடி கிருத்திகை விழாவானது முருகனின் ஆறுபடை வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது திருப்பரங்குன்றம் திருச்செந்தூர் சுவாமிமலை பழனி திருத்தணி பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட அனைத்து முருகனின் அறுபடை வீடுகளிலும் இந்த விழாவானது வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி இந்த நாட்களில் விரதம் இருந்து வழிபடுவார்கள் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.
திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆடிக்கிருத்திகை ஒட்டி ஜூலை 29ஆம் தேதி உள்ளூர் விடுமுறையானது அளிக்கப்படுகின்றது. உள்ளூர் விடுமுறை நாளான அன்றைய தினம் அவசர அலுவலர்கள் கவனிக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில் குறிப்பிடப்பட்ட பணியாளர்களோடு செயல்படும்.
வங்கிகளுக்கும் விடுமுறை பொருந்தாது என்று அறிவித்துள்ளார் எந்த விடுமுறையை ஈடு செய்யும் வகைகள் ஆகஸ்ட் 10ஆம் தேதி சனிக்கிழமை ஆனது வேலை நாட்களாக கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
அன்றைய தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகம் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை செய்யும் நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது