மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க! Motorola Edge 50  Smart Phone

மிகக் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

Motorola Edge 50  Smart Phone

 Motorola Edge 50  Smart Phone: கடந்த மாதம் மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50) ஸ்மார்ட்போன் ரூ.25,999 விலையில் விற்பனை செய்யப்பட்டது . இந்நிலையில் இந்த போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்னாப்டிராகன் சிப்செட், 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த மோட்டோரோலா போன் வெளிவந்தது. இப்போது இந்த போனின் புதிய விலை மற்றும் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Motorola Edge 50  Smart Phone
Motorola Edge 50  Smart Phone

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைக்கப்பட்டு ரூ.21,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.20,999 விலையில் வாங்கிவிட முடியும்.

Motorola Edge 50  Smart Phone

மோட்டோரோலா எட்ஜ் 50 (Motorola Edge 50 Specifications): தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 (Snapdragon 7 Gen 1) சிப்செட் வசதியுடன் மோட்டோரோலா எட்ஜ் 50 போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Hello UI சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியைக் கொண்டுள்ளது இந்த போன். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட் இந்த போனுக்கு கிடைக்கும்.

50எம்பி சோனி எல்ஒய்டி-700சி பிரைமரி சென்சார் (Sony LYT-700C primary sensor) + 13எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி 3X டெலிபோட்டோ கேமரா என ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50. மேலும் 32எம்பி செல்பி கேமரா மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இந்த மோட்டோரோலா எட்ஜ் 50 போன் 6.4-இன்ச ஃபுல் எச்டி பிளஸ் கர்வ்ட் பிஒஎல்இடி (pOLED) டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் சப்போர்ட், 1900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 360 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளது.

மேலும் MIL-810H இராணுவ சான்றிதழ் கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 ஸ்மார்ட்போன். பின்பு IP68 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் வெளிவந்துள்ளது இந்த போன். 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ்கொண்டுள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 மாடல்.

டால்பி அட்மாஸ் (Dolby Atmos), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த மோட்டோரோலா போன். ஜங்கிள் கிரீன் (Jungle Green) மற்றும் பான்டோன் பீச் ஃபஸ் (Pantone Peach Fuzz) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

Motorola Edge 50  Smart Phone

அதேபோல் 5000mAh பேட்டரி வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது மோட்டோரோலா எட்ஜ் 50 போன். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 68W வயர்டு சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

குறிப்பாக 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) டூயல் 4ஜி வோல்ட்இ (Dual 4G VoLTE), வைஃபை 6 802.11ஏஎக்ஸ் (Wi-Fi 6 802.11ax), புளூடூத் 5.2 (Bluetooth 5.2), ஜிபிஎஸ் (GPS), யுஎஸ்பி டைப்-சி(USB Type-C), என்எப்சி ( NFC) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் மோட்டோரோலா எட்ஜ் 50 போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் பட்ஜெட் விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Leave a Comment

error: Content is protected !!