தமிழகத்தில் மார்ச் 12ஆம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!- முழு விவரம் இதோ!
March 12 Local Holiday Tanjavur
March 12 Local Holiday Tanjavur:தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் நடைபெறும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது மக்கள் அதனை சிறப்பாக கொண்டாட ஏதுவாக உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அந்தவகையில், தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளூர் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார்.
அதாவது, மாசி மகத்தை முன்னிட்டு கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி விழா வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி புதன் கிழமை அன்று நடைபெற உள்ளது.
எனவே, இந்த திருவிழாவில் கலந்து கொள்ள தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய வருகின்ற மார்ச் 29 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.