தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் பணி -விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!! TN TRB Recruitment 2024 Apply Last Date

தமிழகத்தில் 1768 இடைநிலை ஆசிரியர் பணி -விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!

TN TRB Recruitment 2024 Apply Last Date

TN TRB Recruitment 2024 Apply Last Date தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் தற்போது தேர்வுக்கு நாளை விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மார்ச் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

விண்ணப்பிக்கும் முறை ,காலி பணியிடங்கள், சம்பளம் குறித்து முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN TRB Recruitment 2024 Apply Last Date
TN TRB Recruitment 2024 Apply Last Date

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள 1768 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆனது அறிவித்திருந்தது. இந்த நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 20 கடைசி நாள் என்பதால் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காலி பணியிடங்களின் முழு விவரம்

பின்னடைவு இடங்கள்

தமிழ்- 19, சிறுபான்மை மொழி- 20

புதிய இடங்கள்

தமிழ்- 1388, தெலுங்கு- 75, உருது- 35 கன்னடம்- 2, கள்ளர் நலப் பள்ளிகள்- 18 ,ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் -139, பழங்குடியினர் நலப் பள்ளிகள்- 22 ,மாற்றுத்திறனாளிகள் நலப் பள்ளிகள்- 29.

சென்னை மாநகராட்சி பள்ளிகள்: தமிழ்- 20 ,சிறுபான்மை மொழி உருது-1.

கல்வித் தகுதி

இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் நபர்கள் ஆசிரியர் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் மற்றும் அத்துடன் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் ஒன்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழையும் பெற்றிருக்க வேண்டும். அவர்களுக்கு பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வானது வருகின்ற ஜூன் மாதம் நடத்தப்படும்.

வயதுவரம்பு

1. 7. 2024  53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பி சி, பி சி எம் ,எம் எஸ் சி ,எஸ் சி ,எஸ் சி ஏ மற்றும் எஸ் டி பிரிவினர்கள் 58 வயது வரை உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்

ரூபாய் 20600 முதல் 75,900 வரை

தேர்வு செய்யும் முறை

இந்த தேர்வானது இரண்டு பகுதிகளாக நடைபெறும் முதல் பகுதி தமிழ் மொழி தகுதி தேர்வு அதில் 30 கேள்விகள் 50 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும் இதில் குறைந்த பட்சம் 20 மதிப்பெண்கள் அதாவது 40 சதவீதம் பெற வேண்டும் இரண்டாம் பகுதியில் 150 கேள்விகள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் அதாவது 40% பி சி பி சி எம் எம் பி சி எஸ் சி எஸ் சி ஏ மற்றும் எஸ் டி பிரிவினர்கள் குறைந்தபட்சமாக 45 மதிப்பெண்கள் அதாவது 30சதவீதம் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

தேர்வுக்கான கேள்வித்தாள்களில் மொழி பாடத்துக்கான கேள்விகள் அந்த மொழியிலும் ஆங்கில பாடத்திற்கான கேள்விகள் ஆங்கிலத்திலும் இதர பாடங்களுக்கான கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலும் கேட்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

தேர்வு கட்டணமாக பொது பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும் இட ஒதுக்கீட்டு பிரிவினர் ரூபாய் 300 கட்டணம் செலுத்தினால் போதும் தேர்வு கட்டணத்தை இணையதளம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் இணையதளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ இணையதளம்- Click Here

  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அப்ளை ஆன்லைன் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர் அதில் தோன்றுகின்ற பிறந்த தேதி முகவரி மொபைல் எண் உள்ளிட்ட அடிப்படைத் தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.
  • பின்னர் பதிவு செய்த உங்களின் மொபைல் எண்ணுக்கு உள் நுழைவு ஐடி மற்றும் பாஸ்வேர்ட் கிடைக்கும் அந்த உள் நுழைவு சான்றுகள் மூலம் உள்நுழைந்து கல்வி தகவல்கள் தேர்வு மைய விவரம் போன்ற விவரங்களை உள்ளிட வேண்டும்.
  • பின்னர் அதில் கேட்கப்படும் தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள்.
  • தொடர்ந்து உங்களுக்கான விண்ணப்ப கடத்தை செலுத்திய பின்னர் விண்ணப்பத்தை சமர்ப்பித்து கொள்ளுங்கள்.
  • எதிர்கால பயன்பாட்டிற்கும் அந்த விண்ணப்பத்தை சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் தேர்வு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள இணையதள பக்கத்தை பார்வையிடுங்கள்.

TN TRB ANNOUNCEMENT PDF

இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க மார்ச் 15ஆம் தேதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் மார்ச் 20 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது இதனை தொடர்ந்து நாளையுடன் விண்ணப்பம் செய்வதற்கான அவகாசம் உடைய உள்ளதால் இதுவரை விண்ணப்பிக்காத ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் இது போன்ற வேலை வாய்ப்பு சம்பந்தமான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் பெற்றுக்கொள்ள எங்கள் வாட்சப் குரூப்பில் இணையுங்கள்.

 

Leave a Comment

error: Content is protected !!